ரிடையர்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் எழுதுன லெட்டர் பரபரப்பு ஆகியிருக்கு. நடந்து முடிஞ்ச தேர்தல்ல லட்சக்கணக்கான பேர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதுபற்றித்தான் ரிடையர்டு ஐ.ஏ.எஸ். தேவ சகாயம், இங்குள்ள மாநிலத் தேர்தல் அதிகாரிக்கு ஹாட்டாவே கடிதம் எழுதியிருக்காரு. எங்க குமரி மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 10 ஆயிரம் வாக்காளர்களின் ஓட்டுக்கள் காணாமல் போயிருக்கு. வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் அவங்க வாக்குகள் ஒரே மாதத்திற்குள் முறைகேடா நீக்கப்பட்டிருக்கு. தமிழகம் முழுக்க இதே போன்ற புகார்கள் எழுந்தும், தேர்தல் ஆணையம் துறை ரீதியிலான விசாரணையைக் கூட இதுவரை நடத்தலைன்னு கொஞ்சம் கடுமையான தொனியிலேயே அவர் கேள்விகள் எழுப்பி இருக்காராம்.
இதுக்கெல்லாம் யார் காரணமாம்?' மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் இருக்கிறவங்க, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளைப் பட்டியல் எடுக்கச் சொன்ன உள்ளாட்சித் துறை மந்திரி வேலுமணி, அதிலுள்ள பலரையும் நீக்கும் பொறுப்பைத் தலைமைத் தேர்தல் அதிகாரியான சத்யப்பிரதா சாகுவிடம் ஒப்படைச்சாராம். சாகுவோ இந்தப் பொறுப்பை, தேர்தல் ஆணையத்திலேயே உள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டரான அசோக்குமாரிடம் ஒப்படைச்சிருக்காரு. அந்த அசோக்குமார்தான், மாவட்டம்தோறும் உள்ள வாக்காளர் பட்டியலைத் தனக்கு அனுப்பச் செய்து, அதில் விருப்பம் போல் வாக்காளர்களை வேட்டையாடிட்டாராம். இதனால் தான் தமிழகம் முழுக்க, ஓட்டைக் காணோம்'ங்கிற கூக்குரல் இந்த முறை அதிக அளவுக்கு எழுந்திருக்கு. 2016 தேர்தலில் ஜெ. இதே டெக்னிக்கைப் பயன்படுத்தியதால்தான் பல தொகுதிகளில் பார்டரில் கரையேறி, அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிச்சிதாம்.' இந்த கோல்மால் டெக்னிக் எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகுதுங்கிறது மே 23-ல் தெரிஞ்சிடும்.