Skip to main content

“குறைபாடான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டுள்ளது” -சர்ச்சைக்கு சக்திமான் நடிகர் விளக்கம்!

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

shaktiman

 

 

90களில் பிறந்து சிறுவர்களாக வளர்ந்தவர்களுக்கு சக்திமான் தொடர் என்பது தற்போதைய மார்வெல் டிசி சூப்பர் ஹீரோ படங்கள் போன்றது. பலருக்கும் பிடித்தமான சக்திமான் ஏற்படுத்திய தாக்கம் எண்ணிலடங்காதவை. இந்நிலையில் சக்திமான் கதாபாத்திரத்தில் நடித்த முகேஷ் கண்ணா பெண்கள் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

 

பெண்கள் தங்களுக்கு முன்பு நடந்த பாலியல் ரீதியலான பிரச்சனைகளை வெளியில் சொல்லி குற்றச்சாட்டு வைப்பதுதான் மீடூ இயக்கம். இது ஹாலிவுட்டில் தொடங்கி படிப்படியாக பாலிவுட், கோலிவுட் என்று கடந்த நான்கு ஆண்டுகளில் பெரும் இயக்கமாக உருவெடுத்துள்ளது. 

 

இந்நிலையில் நடிகர் முகேஷ் கண்ணா இந்த இயக்கம் குறித்து பேசுகையில், “பெண்களின் வேலை வீட்டைப் பார்த்துக் கொள்வது. வேலை செய்ய ஆரம்பித்தவுடன்தான் இந்த மீ டூ பிரச்சனை தொடங்கியது. ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நடக்க வேண்டும் என்று இன்று பெண்கள் பேசி வருகின்றனர்” என்று கருத்துக் கூறியிருந்தார்.

 

இவரின் இந்த கருத்து சமூக வலைதளத்தில் மிகப்பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முகேஷ் கண்ணா இதற்கு விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடைய பேச்சு மிகவும் தவறான முறையில் புரிந்து கொள்ளப்பட்டிருப்பது எனக்கு ஆச்சர்யமளிக்கிறது. மேலும் முற்றிலும் குறைபாடான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டுள்ளது. நான் பெண்களுக்கு எதிரானவன் என்பது போல சித்தரிக்கப்படுகிறது. ஆனால் என்னைப் போல பெண்களை மதிப்பவர்கள் யாரும் கிடையாது என்பதை என்னால் மிகவும் நம்பிக்கையுடன் சொல்லமுடியும். பெண்கள் பணிபுரிய கூடாது என்று நான் சொல்லவே இல்லை.

 

என்னுடைய பேச்சுகளை தவறான முறையில் திரிக்க வேண்டாம் என்று என்னுடைய நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்