Skip to main content

“யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் கிடையாது” - சர்ச்சைக்கு சந்தானம் விளக்கம் 

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
santhanam about vadakkupatti ramasamy issue

டிக்கிலோனா படம் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் யோகி, மீண்டும் சந்தானத்தை வைத்து இயக்கியுள்ள படம் வடக்குபட்டி ராமசாமி. பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரித்துள்ள இப்படத்தில் மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது.

மேலும் ‘சாமியே இல்லைனு ஊருக்குள்ள சுத்திட்டு திரிஞ்சியே அந்த ராமசாமி தான நீ’ என்ற வசனம் இடம் பெற்றிருந்த நிலையில் அந்த வசனம் பெரியாரை விமர்சனம் செய்யும் விதமாக அமைந்துள்ளதாக சர்ச்சையானது. சந்தானமும் கடந்த பொங்கலன்று அந்த வசனத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில் அது இன்னும் சர்ச்சையான பிறகு, அந்த பதிவை நீக்கிவிட்டார். 

இப்படம் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதையொட்டி நடந்த இசை வெளியீட்டு விழாவில் சர்சை குறித்து பேசிய சந்தானம், “ரசிகர்களை ஜாலியாக சிரிக்க வைக்க வேண்டும். இது தான் என் வேலை. மற்றபடி யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணமோ அல்லது யாரையும் தாக்கி பேச வேண்டும் எண்ணமோ எனக்கு நிச்சயமாக கிடையாது. இது நான் கும்புடுகிற கடவுளுக்கு தெரியும். நேசிக்கிற ரசிகர்களுக்கு தெரியும்” என்றார். 
 

சார்ந்த செய்திகள்