![gdsbsdbs](http://image.nakkheeran.in/cdn/farfuture/LVFsx6-M-W0sIVJgqMizBANzBP_EPIH6_VHDyHxuP1c/1626508718/sites/default/files/inline-images/Untitled-1g_1.jpg)
இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘பொம்மை’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஏஞ்சல் ஸ்டுடியோஸ் MH LLP வழங்கும் இப்படத்தை வி. மருது பாண்டியன், Dr. ஜாஸ்மின் சந்தோஷ், Dr. தீபா டி. துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
இப்படத்தின் இசை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தின் ட்ரைலர் எஸ்.ஜே. சூர்யா பிறந்தநாளான ஜூலை 20ஆம் தேதி அன்று வெளியாகும் என இப்பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் 'பொம்மை' பட ட்ரைலர் ரிலீஸ் குறித்து எஸ்.ஜே. சூர்யா ட்வீட் செய்துள்ளார். அதில்.. "திரையரங்கு வெளியீட்டு அனுமதியை அரசு ஒத்திவைத்துள்ளது. எனவே அதன்படி 'பொம்மை' பட ட்ரைலர் வெளியீட்டில் இன்னும் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுள்ளது. மன்னிக்கவும் நண்பர்களே. நடப்பவை எல்லாம் நன்மைக்கே என எண்ணுவோம். வரும்போது சாலிடாக வருவோம்" என பதிவிட்டு ட்ரைலர் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக அறிவித்துள்ளார்.