Skip to main content

கண் கலங்கும் முகென்... டென்ஷனான சாண்டி... மிரட்டும் வனிதா...

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் சரவணன் திடீரென்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு பெண்களை பற்றிய சரவணன் தெரிவித்த கருத்தே காரணம் என்று சொல்லப்பட்டது.
 

mugen scolded by vanitha

 

 

நாமினேஷனில் இருந்த சாக்‌ஷி, அபிராமி மற்றும் லாஸ்லியாவில் யார் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கையில் சாக்‌ஷி எலிமினேட் செய்யப்பட்டார். இதனையடுத்து கெஸ்ட்டாக வனிதா உள்ளே வந்து பார்வையாளர்கள் முதல் ஹவுஸ் மேட்ஸ் வரை அதிர்ச்சியை கொடுத்தார். உள்ளே வந்தவுடன் வழக்கம்போல தன்னுடைய அதிகாரத்தை ஒவ்வொரு போட்டியாளர் மேலும் காட்ட தொடங்கினார்.
 

இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் கோபத்தில் சேரை தூக்கி அபிராமியை அடிக்க ஓங்கிய முகென் அதனை அடுத்து வெளியான இறுதி புரோமோவில் கண்கலங்கி உட்கார அவரை சுற்றி மற்ற ஹவுஸ்மேட்ஸ் அட்வைஸ் செய்துகொண்டிருக்கிறார்கள். உடனே சாண்டி டென்ஷனாக, அவரையும் சீண்டுகிறார் வனிதா. 

 

 

சார்ந்த செய்திகள்