Policeman suspended for beating Pani Puri owner

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் காவலராக இருப்பவர் அருண்கண்மணி(36). இவர் குடியாத்தம் பெரியார் சிலை அருகே உள்ள பாணி பூரி கடைக்கு சென்றுள்ளார். அப்போது இவருக்கும், பாணிபூரி கடை உரிமையாளரான ராம்பாபு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

Advertisment

சாப்பிட்ட பானி பூரிக்கு காசு கொடுக்காமல் பார்சல் வாங்கிட்டு போறீங்க என்றுதகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போலீஸ், ஒரு போலீசையை எதிர்த்து பேசுறியா நீ என மிரட்டியதுமில்லாமல் ராம்பாபுவைத்தாக்கியுள்ளார். இதில் ராம்பாபுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisment

இது குறித்து ராம்பாபு கொடுத்த புகாரின்பேரில் அருண்கண்மணி மீது குடியாத்தம் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற நிலையில், தகவல் அறிந்து காவலர் அருண்கண்மணியை பணி இடைநீக்கம் செய்து வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.