Darshan of Ajith Sami in Tirupati Temple!

அஜித் குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தைத்தொடர்ந்து அஜித் மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லி’படத்தில் நடித்து வருகிறர்.

Advertisment

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதரராபத்தில் நடந்துவந்தது. இதில் அஜித் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாகத்தெரிவிக்கப்பட்டது. அண்மையில் முதற்கட்ட படபிடிப்பு முடிவடையும்நிலையில் இரண்டாம் கட்ட படபிடிப்புஇன்னும் சில வாரங்கள்கழித்து தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தில் எஞ்சியுள்ள படப்பிடிப்பை நிறைவு செய்ய அஜித் வெளிநாடு செல்லவுள்ளார். விடாமுயற்சியின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மீதம் 20 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே மீதிஉள்ளது. இதையடுத்து இந்த மாத இறுதியில் விடாமுயற்சி படக்குழு வெளிநாடு செல்லவுள்ளது. இந்த நிலையில் தான் வெளிநாடு செல்லும் முன்பு திருப்பதி கோவிலுக்குச் சென்றுநடிகர் அஜித்குமார் சாமிதரிசனம் செய்துள்ளார். பட்டு வேஷ்டி சட்டையுடன் வந்த அஜித், சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்டார்.