Skip to main content

'அவதார்' அடுத்த பாகம் - எதிர்பார்ப்பை அதிகப்படுத்த படக்குழு வைத்துள்ள பலே திட்டம் 

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

avatar 2 title announced officially

 

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதன் இரண்டாம் பாகம் உருவாகிவரும் நிலையில், இரண்டாம் பாகத்திற்கு 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

 

முதல் படமான 'அவதார்' படத்தின் கதையைத் தொடர்ந்து, ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலகட்டத்தை கடந்து, சல்லி குடும்பம் (ஜேக், நெய்திரி மற்றும் அவர்களது குழந்தைகள்), அவர்களைப் பின்தொடரும் பிரச்சனைகள், ஒருவரையொருவர் பாதுகாப்பாக வைத்திருக்க அவர்கள் செல்லும் தூரம், அவர்கள் உயிருடன் இருக்க போரிடும் போர்கள், அவர்கள் அடையும் துயரங்கள், அதைக்கடந்த அவர்களின் வெற்றிதான் இப்படத்தின் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது . ஜேம்ஸ் கேமரூன் இயக்கி, கேமரூன் மற்றும் ஜான் லாண்டாவ் தயாரித்த இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

 

இரண்டாம் பாகம் டிசம்பர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் குறித்த எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில் செப்டம்பர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் அவதார் முதல் பாகத்தை திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்