vijay sethupathi 50 movie maharaja trailer update

விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2, மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா, ஆறுமுகக் குமார் இயக்கத்தில் ‘ஏஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடரில் நடித்து வந்தார். அது தற்போது கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இதில் மகாராஜா படம் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். இவர்களோடு நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்திற்கு அஜ்னீஸ் லோக்நாத் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் 2024-ன் ‘இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் லாஸ் ஏஞ்சல்ஸ்’ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இந்த விழா ஜூன் 27 முதல் ஜூன் 30 வரை மொத்தம் மூன்று நாட்கள் நடக்கிறது.

Advertisment

vijay sethupathi 50 movie maharaja trailer update

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதி கையில், முகத்தில் ரத்தக்கறையுடன் காணப்படுகிறார். விஜய் சேதுபதியின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ட்ரைலரில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.