Chance of rain in Kanyakumari

Advertisment

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் ஜூன் மூன்றாம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் தமிழக பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை மூன்று முதல் நான்கு நாட்களில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலும் மழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் பரவலாக மழை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.