Skip to main content

ஓவியாவுடன் காதல் ! விளக்கமளித்த ஆரவ் 

Published on 07/11/2018 | Edited on 07/11/2018
oviya

 

 

 

பிக்பாஸிற்கு பிறகு 'ராஜபீமா' படத்தில் நாயகனாக நடித்து வரும் நடிகர் ஆரவ் ஓவியாவுடனான தன் உறவை குறித்து விளக்கமளித்து பேசியபோது... "ராஜபீமாவுக்கு பிறகு மேலும் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறேன். விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். ஓவியாவுடன் சேர்ந்து படம் பண்ணும் ஐடியா இருக்கிறது. நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் எதுவும் செட்டாகவில்லை. நானும் அவரும் சேரும் போது வியாபார ரீதியாக நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். எனவே அதை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான கதை அமைந்தவுடன் நிச்சயம் சேர்ந்து படம் பண்ணுவோம். எனது பிறந்தநாளுக்கு கூட ஓவியா நேரில் வந்து வாழ்த்துக் கூறினார். சிம்பு, பிந்து மாதவி உள்ளிட்டோரும் வந்திருந்தனர். ஓவியாவும் நானும் காதலிக்கிறோம் என செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அதில் உண்மையில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்