first look of Nonviolence has been released

தமிழின் த்ரில் சினிமாவான மெட்ரோ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் ஈர்க்கப்பட்டவர் இளம் நடிகர் ஷிரிஷ். இந்த படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் ஷிரிஷ். அந்த படத்தில் அவரது நடிப்பு கோலிவுட் மட்டுமல்லாமல், தென்னிந்திய திரை உலகில் அதிகம் பேசப்பட்டது. படமும் சூப்பர் வெற்றியை பெற்ற நிலையில், முதல் படத்திலேயே ஹீரோ ஷிரிஷுக்கு ஃப்லிம்ஃபேர் விருது உட்பட பல விருதுகள் கிடைத்தன. இதனையடுத்து மெட்ரோ ஷிரிஷ் என்றே அழைக்கப் பட்டார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, தற்போது மெட்ரோ ஷிரீஷ் நடித்து வரும் புதிய படம் நான்வயலன்ஸ் (அகிம்சை). ஷிரீஷுடன் பாபி சிம்ஹா, யோகிபாபு இணைந்து நடிக்கும் நான்வயலன்ஸ் படத்தை மெட்ரோ இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஷிரிஸ், ஆனந்த கிருஷ்ணன், யுவன் சங்கர் கூட்டணி மீண்டும் கைக் கோர்த்துள்ள நான்வயலன்ஸ் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

Advertisment

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இருக்கிறது என்று கோலிவுட்டில் பரபரப்பாகியிருக்கிறது. மேலும், கோலிவுட்டுக்கு மிரட்டலான ஒரு இளம் ஹீரோ கிடைத்துள்ளார் என்கின்றனர் சீனியர் இயக்குநர்க