Skip to main content

கவனம் ஈர்க்கும்‘கல்கி 2898 ஏ டி; வைரலாகும் ட்ரைலர்!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Kalki 2898 AD trailer is going viral

இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடிடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் 'கல்கி 2898 ஏ டி' படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ட்ரைலர் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இந்தியா முழுதும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தத் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் உள்ள பிவிஆர் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. அந்தத் தருணத்தில் படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத் கலந்து கொண்டு வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் 'கல்கி 2898 ஏ டி ' படத்தின் ட்ரைலரை  வெளியிட்டார். 

இதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், ''இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமானதாகவும், ஏராளமான பொருட்செலவிலும் அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையிலும் தயாராகி இருக்கிறது. ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை வித்தியாசமாக வழங்குவதற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை கண்டு ரசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 'கல்கி 2898 ஏ டி ' படத்தின் ட்ரைலர் தற்போது வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கல்கி 2898 ஏ டி’ படத்தின் வசூல் நிலவரம்; தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 Producer announcement Collection Status of 'Kalki 2898 A D'

இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏ டி’. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

பிரம்மாண்டமானதாகவும், ஏராளமான பொருட்செலவிலும் எடுக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மகாபாரத குருசேத்திர போருக்கு பிறகு மகாபாரத கதாபாத்திரமான அஸ்வத்தாமன் எதற்காக உயிரோடு இருக்கிறார் என்பது பற்றியும், கலிகாலம் தொடங்கி 6000 வருடங்களுக்குப் பிறகும் உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியும், கல்கி முதல் பாகத்தில் கதையாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதில், இந்தியாவில் மட்டும் ரூ.95 கோடி வசூல் ஆகியிருக்கிறது என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இது ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படத்தில் வசூலான ரூ.65.5 கோடி வசூல் சாதனையை முறியடித்துள்ளது. மேலும், இப்படம் உலகம் முழுவதும் ரூ.191.5 கோடி வசூல் சாதனைப் படைத்தாகக் கூறப்படுகிறது. 

தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியாகி நேற்றோடு நான்கு நாள் வசூல் நிலவரப்படி மொத்தம் ரூ.18.5 கோடி வசூல் ஆகியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் இப்படம் வெளியாகி நான்கு நாள் வசூல் நிலவரத்தை படத்தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் பக்கத்தில், இப்படம் ரூ.500 கோடி வசூல் செய்ததாக அறிவித்துள்ளது. 

Next Story

பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்த ப்ளாக் பஸ்டர்கள்!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Back to Back blockbusters from Prabhas

இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடிடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏ டி’. இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

பிரம்மாண்டமானதாகவும், ஏராளமான பொருட்செலவிலும் அனைத்து தரப்பு ரசிகர்களைக் கவரும் வகையிலும் தயாராகி இருக்கிறது. ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை வித்தியாசமாக வழங்குவதற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இத்திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில், பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப்படமாக இப்படம் அமைந்திருக்கிறது. பிரம்மாண்ட படங்களின் நாயகன் பிரபாஸ் நடித்திருந்ததாலேயே அவரது ரசிகர்களுக்கு இப்படம் பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இது போன்ற சிறப்பம்சங்கள் உள்ளதால் ‘கல்கி 2898 ஏடி’ திரையரங்கில் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஓப்பனிங்க் படமாக மாறியிருக்கிறது. இத்திரைப்படத்தை ரசிகர்கள் திருவிழாவைப் போல கொண்டாடி வருவதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.