நாட்டையே உலுக்கிய தந்தூர் கொலை வழக்கு பற்றி தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
தந்தூர் கொலை வழக்கை பற்றி பார்க்க போகிறோம். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் நசீர் குஞ் என்பவர் டெல்லி போலீசில் பணியாற்றி வந்துள்ளார். இவரும், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சந்திரபால் என்ற நபரும், 1995ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி காலையில் இருந்து இரவு வரை டெல்லி நகரம் முழுவதும் காவல் பணியில் ஈடுபட்டிக்கொண்டிருக்கிறார். இரவு நேரத்தில் டெல்லியின் மையப் பகுதியாக இருக்கக் கூடிய அசோகா யாத்ரின் நிவாஸ் என்ற ஹோட்டலில் உள்ள ஒரு பகுதியில் தீ பற்றி எரிவதை அப்துல் நசீர் குஞ் உணர்ந்து அந்த இடத்திற்கு செல்கிறார். அங்கு செல்லும் போது, அந்த ஹோட்டலில் பணியாற்றிய செக்யூரிட்டி, இவரை தடுத்து மிச்சமாகி போன பழைய குப்பைகளை எரிப்பதால், தீ பரவுவதாகக் கூறுகின்றனர்.
இருந்தும் சந்தேகம் தீராத அப்துல் நசிரின் கையில் வாக்கி டாக்கி இல்லாததால், பக்கத்து தெருவில் இருக்கக்கூடிய வாக்கி டாக்கியை வாங்கி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கிறார். அதன் பிறகு, கண்ட்ரோல் ரூமுக்கும், தன்னுடைய மேல் அதிகாரிக்கு இது குறித்து தகவல் சொல்கிறார். இதனிடையே, ஹோட்டலில் அதிகப்படியான நெருப்பு பரவியதால், அந்த தெருவில் காய்கறி கடை வைத்திருக்கும் அனோரா தேவி, ஹோட்டலில் நெருப்பு என கத்துகிறார். இதனை கண்ட அப்துல் நசீர், ஹோட்டலின் பின்வாசலில் உள்ள ஏழடி சுவரில் ஏறி கீழே குதிக்கும் போது, தந்தூர் அடுப்பு 35 அடி உயரத்தில் தீ எரிந்துக்கொண்டிருப்பதை பார்க்கிறார். பக்கத்தில் பேண்ட் சட்டை போட்டு ஒருவரும், ஜிப்பா அணிந்த ஒருவரையும் பார்த்து சத்தம் போட்டுவிட்டு, பக்கெட்டில் தண்ணீரை பிடித்து தந்தூர் அடுப்பின் ஊற்றும்போது தீ குறைகிறது. அப்போது, அந்த அடுப்பில் அடுக்கி வைத்திருந்த கட்டைகளில் ஒரு மனித உருவம் படுத்திருப்பதை பார்க்கிறார். உடனடியாக ஜிப்பா அணிந்த நபரை பிடித்து வைத்திருந்த நேரத்தில் ஆபிஸர், தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் அந்த இடத்திற்கு வந்துள்ளனர். வேறு எங்காவது தீ பிடித்திருக்கிறதா என்று போலீசார் சோதனை செய்த நேரத்தில் பேண்ட் சட்டை அணிந்த நபர் அங்கிருந்து காணாமல் போகிறார். அந்த அடுப்பில் ஏற்பட்ட தீயை அணைத்த பிறகு பார்க்கும் போது முக்கால்வாசி எறிந்த ஒரு மனித உருவம் இருக்கிறது.
ஜிப்பா அணிந்த நபரிடம் விசாரித்தால், தனது பெயர் கேசவ் குமார் என்றும் அந்த ஹோட்டலில் மேனேஜர் வேலை பார்ப்பதாகவும் சொல்வதை தவிர எந்தவித தகவலும் சொல்ல மாட்டிக்கிறார். இதனையடுத்து, ஜெனரல் மேனேஜர் துளி, சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்தவர்களிடம் விசாரிக்கிறார். அன்று இரவு 10 மணிக்கு வந்து நின்ற ஒரு மாருதி காரின் டிக்கியில் இருந்து ஏதோ ஒரு மூட்டையை கேசவ் குமாரும் ஒரு நபரும் தூக்கிக்கொண்டு ஹோட்டலில் உள்ளே வந்து லீவ் என்று சொல்லிவிட்டு பணியாற்றிய அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டனர். அதன் பிறகு, அந்த மூட்டையை பிரித்து பிணத்தை அடுப்பில் வைத்து, பக்கத்து கடையில் இருந்து 4 பக்கெட் வெண்ணெய்யை வாங்கி எரித்தனர் என்று செக்யூரிட்டி மூலம் தெரிய வருகிறது. கேசவ் குமாரிடம் விசாரித்தாலும் எந்தவித உண்மையையும் அவரிடம் இருந்து போலீசாரால் பெறமுடியவில்லை.
இந்த தகவல் டெல்லி கமிஷனர் நிக்கில் குமாருக்கு தெரியவந்து, கண்னால் பார்த்த பின்னும் குற்றவாளியை தப்பவிட்ட அப்துல் நசீரை சஸ்பண்ட் செய்கிறார். காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சுசில் குமார் தன்னுடன் இருந்ததாகவும், அடுப்பில் எரிந்துப் போன அந்த மனித உருவம் அவரின் மனைவி நைனா சாஹ்னி என்று கேசவ் குமார் இதற்கிடையில் உண்மையைச் சொல்கிறார். காலேஜில் மாணவர்கள் மத்தியில் புகழ்பெற்ற நைனா சாஹ்னி மாணவர் அமைப்பில் இருந்து விமான ஓட்டுவதற்கான பயிற்சியை கற்றுக்கொண்டு, யு.கேவில் இருக்கக்கூடிய பெரிய பிளைங் ஸ்கூலில் கமர்சியல் பிளைட்டையே ஓட்டுவதற்கான பயிற்சி பெற்று அங்கு செர்டிபிகேட்டை வாங்குகிறார். அதன் பின்பு, காங்கிரஸ் கட்சியில் மாணவர் அமைப்பில் நைனா சாஹ்னி சேர்கிறார். மத்லுப் கரீம் தலைவராக இருக்கக்கூடிய மாணவர் காங்கிரஸில் நைனா சாஹ்னி ஜெனரல் செக்ரேட்டரியாக இருக்கிறார். ராஜீவ் காந்தி, பிரியங்கா காந்தி என அன்றைக்கு முக்கிய அமைச்சர்களாக இருக்கக்கூடிய எளிதில் பார்த்து பழகக்கூடிய நபராக நைனா சாஹ்னி வளர்கிறார். இதனிடையில், மத்லுப் கரிமுடன் பழகி காதலித்து, திருமணம் செய்யாமலே லிவ் இன் முறையில் வாழ்க்கையை ஓட்டுகிறார். இருவரும் வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவர் வீட்டிலும், இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, இருவரும் சமாதானம் செய்துக்கொண்டு பிரிகிறார்கள். மத்லுப் கரிமூக்கு குல் நாஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெறுகிறது. காதலர்கள் இருவரும் பிரிந்தாலும், தொடர்ந்து நண்பர்களாக இருக்கின்றனர்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில், அந்தாண்டு நடக்கக்கூடிய எலெக்சனில் மாணவர் காங்கிரஸில் சுசில் குமார் தலைவராகப் பொறுப்பேற்கிறார். ஜெனரல் செக்ரேட்டரியாக இருந்த நைனா சாஹ்னி, இவரோடு பழகிய பின்பு, இருவருக்கும் காதல் மலர்கிறது. அரசு துறையில் வேலைப்பார்க்க கூடிய சுசில் குமாரினுடைய மாமா பெயரை போட்டு மந்திர் மார்க் என்ற பகுதியில் அரசு ஊழியர்களுக்கான வீட்டில் சுசில் குமாரும், நைனா சாஹ்னியும் குடியேறுகிறார்கள். பழைய காதலை நினைவுப்படுத்தி கட்சி, அரசியல், பொறுப்பு இதில் இருந்து விடுப்பட்டு மனைவியாக மட்டும் இருக்க வேண்டும் என சுசில் குமார் நைனா சாஹ்னியிடம் கண்டிசன் போட, தனது ஆசையை மறந்து காதலரின் கண்டிசனுக்கு ஒப்புக்கொள்கிறார். இதையடுத்து, உறவினரின் இடத்தில் பொட்டிக் ஒன்றை நைனா சாஹ்னி நடத்தி வருகிறார். இருப்பினும், நைனா சாஹ்னி மீதான சந்தேகம் சுசில் குமாருக்கு இருந்துக்கொண்டே இருந்திருக்கிறது. மது குடித்துக்கொண்டு, மனைவியை கையாலும், கட்டையாலும் அடித்து துன்புறுத்தி வந்திருக்கிறார். இதையெல்லாம் பொறுத்துக்கொண்ட நைனா சாஹ்னி, வெளியே சொல்லாமல் இருக்கிறார். தான் செய்த திருமணம் பிடிக்காமல் போன பெற்றோரிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறாள். தன்னுடைய கஷ்டத்தை பகிர்ந்துகொள்ள கூட ஆளில்லாத நைனா சாஹ்னி நடந்த சம்பவங்கள் அனைத்தையும் மத்லுப் கரிமிடம் சொல்லி ஆறுதல் அடைவாள். இது சுசில் குமாருக்கு மேலும் சந்தேகத்தை வலுக்கிறது.
சம்பவம் நடந்த அன்று, போன் பேசிக்கொண்டிருந்த நைனா சாஹ்னி, சுசில் குமார் வீட்டுக்கு வருவதை கண்டவுடன் போனை கட் செய்து கீழே வைக்கிறார். மனைவி யாரிடம் கடைசியாக பேசினால், என்பதை தெரிந்துக்கொள்ள அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசுகிற போது மத்லுப் கரிமுடைய குரல் கேட்கிறது. இதில் ஆத்திரமடைந்த சுசில் குமார், மது குடித்துக் கொண்டிருந்த மனைவியிடம் கேட்டாலும் சுசில் குமாரின் பேச்சை அலட்சியப்படுத்துகிறாள். இதனை கண்டு மேலும் ஆத்திரமடைந்த சுசில் குமார், தன்னுடைய துப்பாக்கியை எடுத்துக்கொண்டு நைனா சாஹ்னியை சுட்டத்தில் சம்பவ இடத்திலேயே உயிரழக்கிறார். அதன் பின், அங்கு படிந்திருந்த ரத்தத்தை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு நைனா சாஹ்னியை பெட் சூட்டில் சுற்றி மூட்டையாக கட்டி காரில் ஏற்றிக் கொண்டு வருகிறார். அப்போது இவரும், இவருடைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நண்பர்களும் சேர்ந்து அசோகா யாத்ரின் நிவாஸ் ஹோட்டலில் உள்ள பார்பிகியூ ரெஸ்டாரண்டை வாங்கிய நியாபகம் வருகிறது. அதன் பிறகு, அந்த ஹோட்டலுக்கு சென்று, தான் வேலைக்குச் சேர்த்துவிட்ட கேசவ் குமாரை வண்டி இருக்கும் இடத்திற்கு வரவழைத்து நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சொல்கிறார். இருவரும் ஐடியா போட்டு, ஊழியர்களை வெளியே அனுப்பிவிட்டு டிக்கியில் இருந்து நைனா சாஹ்னியை தூக்கிக்கொண்டு தந்தூர் அடுப்பில் குப்பைகள் மற்றும் மரக்கட்டைகளோடு பிணத்தை படுக்க வைத்து எரிக்கின்றனர். இது தான் நடந்த சம்பவம் என போலீசாருக்கு தெரிய வருகிறது. இவ்வழக்கு குறித்த மேலும் விவரங்களை அடுத்த தொடரில் காணலாம்..