திருமண நிகழ்ச்சியில் செல்போன் திருட்டு காரணமாக ஏற்பட்ட மோதலால் வங்கதேச கிரிக்கெட் வீரர் சௌம்யா சர்க்காரின் திருமணத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வங்கதேச கிரிக்கெட் வீரரான சௌம்யா சர்க்கார் கடந்த புதன் கிழமை பிரியோந்தி தீப்நாத் பூஜா (19) என்ற பெண்ணை கரம் பிடித்தார். அந்த திருமண விழாவில் திடீரென்று திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் சிலரின் செல்போன்கள் திருடப்பட்டது கண்டறியப்பட்டது. சௌம்யா சர்க்காரின் தந்தையின் செல்போன் உட்பட ஏழு பேரின் செல்போன்கள் காணாமல்போயுள்ளன. அங்கிருந்த நபர்கள் சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் பிடிபட, உடனே அவர்கள் திருமணத்திற்கு வந்த உறவினர்களை தாக்கி உள்ளனர் இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததோடு, செல்போன்களை மீட்டுள்ளனர்.