ஆஸ்திரேலியாவை சேர்ந்த 99 வயது நீச்சல்வீரர் ஜார்ஜ் கொரோனஸ் காமன்வெல்த் பயிற்சிபோட்டியில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் 56.12நொடிகளிலில் கடந்து தங்கம் வென்று உலகசாதனை படைத்துள்ளார்.
கடந்த வாரம் குயின்ஸ்லாந்தில் காமன்வெல்த் பயிற்சி போட்டிகள் நடைபெற்றன. இதில் நீச்சல் போட்டியில் 100முதல்104 வயதுடையவர்களின் பிரிவில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நீச்சல் வீரர் ஜார்ஜ் கொரோனஸ் 50 மீட்டர் இலக்கை 56.12 நொடிகளில் கடந்து
தங்கப்பதக்கம் வென்று முந்தைய சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பிரிட்டனை சேர்ந்த ஜான் ஹாரிசன் 1.31 நொடிகளில் நீந்தியது தான் முந்தைய சாதனையாக இருந்தது. தற்போது அதனை ஜார்ஜ் முறியடித்துள்ளார்.
இதுகுறித்து ஜார்ஜ் கூறுகையில், "நான் இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்திலே நான் நீச்சல் அடிப்பதை விட்டுவிட்டேன். அதன் பின்னர் அதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. உடற்பயிற்சிக்காகதான் என் ஓய்வுக்காலத்தில் மீண்டும் நீச்சல் அடிக்கத்தொடங்கினேன். என்னுடைய இலக்காக இருந்தது 58 நொடிகள்தான். ஆனால் அதை விட இரண்டு நொடிகள் முன்னே வந்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது என்று ஜார்ஜ் கூறினார். வரும் ஏப்ரல் மாதம் ஜார்ஜ் செஞ்சுரி அடிக்கப்போகிறார். அதாவது தனது நூறாவது பிறந்தநாளை கொண்டாடப்போகிறார். அதுமட்டுமல்லாமல் தனது நீச்சல் பயிற்சியை அதிதீவிரமாக இவர் மேற்கொண்டது இவரது 80வது வயதின் தொடக்கத்தில்தான்.