Skip to main content

இந்தியா- தென்னாப்ரிக்கா ஒருநாள் தொடர் முழுமையாக ரத்து!

Published on 13/03/2020 | Edited on 13/03/2020

இந்தியா- தென்னாப்ரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
 

இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 76லிருந்து 81 ஆக அதிகரித்துள்ளது. 64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா அச்சம் காரணமாக பல்வேறு மாநில அரசுகளும் பள்ளிகள், மால்கள், தியேட்டர்களை மூட உத்தரவிட்டுள்ளன.

india vs south africa one day series cancel coronavirus bcci announced

இந்த நிலையில் இந்தியா- தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் நேற்று (12/03/2020) ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கரோனா அச்சம் காரணமாக மீதமுள்ள இரு போட்டிகளும் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 


மார்ச் 15- ஆம் தேதி லக்னோவில் இரண்டாவது ஒருநாள் போட்டியும், மார்ச் 18- ஆம் தேதி கொல்கத்தாவில் மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செப்.19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டி!

Published on 25/07/2021 | Edited on 25/07/2021

 

IPL match in UAE from Sep 19!

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 19- ஆம் தேதி முதல் நடைபெறும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளின் அட்டவணையை வெளியிட்டது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (Board of Control for Cricket in India- 'BCCI'). அதன்படி, செப்டம்பர் 19- ஆம் தேதி அன்று துபாயில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் இறுதிப் போட்டி துபாயில் அக்டோபர் 15- ஆம் தேதி அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கரோனா காரணமாக, இந்தியாவில் மே 2- ஆம் தேதிக்கு பின் ஐபிஎல் போட்டித் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

உலகக்கோப்பை இறுதிப்போட்டி- இந்திய அணி அறிவிப்பு!

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

world test championship final india cricket team announced

உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (Board of Control For Cricket In India) அறிவித்துள்ளது.

 

அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணியில் ரஹானே, ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ரிஷப் பந்த், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சமி ஆகிய 11 வீரர் இடம் பெற்றுள்ளனர். 

 

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி இந்திய நேரப்படி நாளை (18/06/2021) பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெறுகிறது.