Skip to main content

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடுமை...

Published on 20/08/2020 | Edited on 21/08/2020

 

Gingee

 

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் தனது தாத்தாவுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று காலை 7 மணி அளவில் சிறுமியை தாத்தா விவசாய நிலத்தில் இருக்குமாறு சொல்லிவிட்டு, தனது மாடுகளை ஓட்டி தரிசுநிலப் பகுதியில் மேய்ச்சலுக்கு கட்டிவிட்டு மீண்டும் தனது விவசாயம் நிலத்திற்கு திரும்பி வந்தார்.

 

அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 30) சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாத்தா ராஜேந்திரனை பிடித்து இழுத்துக் கீழே தள்ளினார். மிரண்டுபோன ராஜேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். அப்போது சிறுமியிடம் விசாரித்தபோது, ராஜேந்திரன் கடந்த நான்கு மாதமாக தனியாக இருக்கும்போது அவ்வப்போது வந்து இப்படித்தான் தவறாக நடந்து கொள்கிறான் என்று அப்பாவித்தனமாக கூறியுள்ளார்.

 

தாத்தா அதிர்ச்சி அடைந்துள்ளார். தனக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றித் தெரியாமலேயே உள்ள அந்த மனநலம் பாதித்த சிறுமியிடம், ராஜேந்திரன் என்ற மிருகம் செய்த செயல்களைப் பற்றி செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ராஜேந்திரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த ராஜேந்திரன் தலைமறைவாகியுள்ளார். போலீசார் அவரை தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகளை ஏமாற்றிய நெல் வியாபாரி; போலீசார் அதிரடி!

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

villupuram gingee paddy salesman issue

 

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து பணம் தராமல் ஏமாற்றிய வியாபாரி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அப்பாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் அளித்த புகாரில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குமார் நெல் வியாபாரத் தொழில் செய்து வருவதாகவும் இதன் மூலம் தனக்கு அறிமுகமானவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் சேவூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பாவு நையனார் என்பவரின் மகன் ஜீனசெல்வம் (வயது 62). இவருக்கு கடந்த 2017 முதல் 2018 ஆண்டு வரை செஞ்சி அப்பாப்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து சுமார் 733 நெல் மூட்டைகளை இரண்டு லாரிகளில் ஏற்றி ஜீன செல்வத்திற்கு அனுப்பியதாகவும் அதற்கான தொகை சுமார் 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை ஜீன செல்வம் விவசாயிகளுக்கு தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

 

இதுகுறித்து குமார் 07.04.2023 அன்று அளித்த புகார் மனுவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்படி துணை காவல் கண்காணிப்பாளர் சுவாதி மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவலர்கள் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்த ஜீன செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

Next Story

செஞ்சி கோட்டையை கைப்பற்றுவாரா அமைச்சர் மஸ்தான்?

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

Senji local body election

 

செஞ்சி பேரூராட்சியின் தலைவராக தற்போதையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கடந்த 1986 முதல் 2016ஆம் ஆண்டு வரை தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அதன் பிறகு 2016ஆம் ஆண்டு எம்.எல்.ஏ. மற்றும் 2021ஆம் ஆண்டும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக செஞ்சி மஸ்தான் இருக்கிறார். 

 

இந்த நிலையில் 18 வார்டுகள் கொண்ட செஞ்சி பேரூராட்சியில், 11,497 ஆண் வாக்காளர்கள், 12,422 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 23,939 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு அதிமுக சார்பில் 18 வார்டுகளிலும், திமுக சார்பில் 17 வார்டுகளிலும் ஒரு வார்டில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகின்றன. மற்றும் பாஜக, நாம் தமிழர், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளுடன் சுயேச்சைகள் உட்பட 77 பேர் போட்டி களத்தில் உள்ளனர். 

 

இதில் அமைச்சர் மஸ்தானின் மகன் மொக்தியார் அலி, 6வது வார்டில் போட்டியிடுகிறார். அமைச்சரின் மனைவி சைத்தானி பீ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிறகு போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். நகரில் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசிய அமைச்சர் மஸ்தான், “தொடர்ந்து எனக்கு வெற்றியை தந்துள்ளீர்கள். அதேபோன்று நடைபெறவுள்ள பேரூராட்சி மன்றத் தேர்தலிலும் அனைத்து வார்டுகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வெற்றி பெற வேண்டும். வெற்றிபெற வைப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தலில் அனைத்து சமூக மக்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால் எமது துணைவியார் போட்டியிடுவதில் இருந்து விலகிக்கொண்டார். எனவே உங்களுக்காக தொடர்ந்து பாடுபடும் திமுக வெற்றி பெற வேண்டும்” என்று பேசினார். 

 

எப்படியும் 6-வது முறையாக திமுக பேரூராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்று அமைச்சர் மஸ்தான் முழுவீச்சில் தேர்தல் பணி செய்து வருகிறார். இந்த முறை எப்படியும் திமுகவிடம் இருந்து நாம் கைப்பற்றியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர். பிரமுகர் தொழிலதிபர் ரங்கநாதன் அவருடன் வழக்கறிஞர் அணியை சேர்ந்த கதிரவன் ஆகியோர் தீவிர தேர்தல் பணியில் இறங்கியுள்ளனர். பா.ஜ.க. எப்படியும் சில இடங்களில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் நகர தொழில் அதிபர்களில் ஒருவரான கோபிநாத் கடும் முயற்சி செய்து வருகிறார். 

 

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சென்னை கோட்டையில் கொடி ஏற்றிய திமுக, செஞ்சி கோட்டையை பிடித்து கொடி நாட்டுமா அல்லது அதிமுகவிடம் இந்த முறை கோட்டை விடுமா என்பது தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையில் தெரியவரும்.