இந்தியாவில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சீசன் - 12 நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பட்டத்தைத் தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .இந்நிலையில் சென்னை ஐஐடி கல்லூரியில் நடைப்பெற்ற தேர்வில் கேள்வி வினாத்தாளில் எம்.எஸ்.தோனியின் டாஸ் குறித்துக் கேள்வி இடம் பெற்றது. சென்னை சூப்பர் கிங் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூன்று முறை டாஸ் வென்றுள்ளார். அந்த மூன்று முறையும் பந்து வீச்சையே டோனி தேர்ந்தெடுத்துள்ளார்.மேலும் இரண்டாவது பேட்டிங்கின் போது பனி பொழிவு இருக்கும். அதனால் இலக்கை துரத்துவது எளிதாக இருக்கும் என்ற உத்தியை கையாள்கிறது நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்த எம்.எஸ். தோனி குறித்த வினாத்தாள் தயாரித்த சென்னை ஐஐடி பேராசிரியர் விக்னேஷ் முத்து விஜயன் கூறுகையில் "மாணவர்களிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றதும் மும்பைக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் என்ன முடிவெடுப்பார் என கேட்டிருந்தோம்". பனிப்பொழிவு பகலிரவு ஆட்டங்களில் அதிகமாக இருக்கும். இதனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சரியான வேகத்தில் பந்து வீச முடியாமல் போகும் .ஆகையால் தான் சென்னை அணி பெரும்பாலும் பந்து வீச்சை தேர்ந்தெடுக்கும். மேலும் டோனி டாஸ் வென்றால் என்ன செய்வார்? என்ற கேள்வியும் ஐஐடி வினாத்தாளில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ஐசிசி கிரிக்கெட் வாரியம் ஐஐடியில் கேட்கப்பட்ட கேள்வி வினாத்தாளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.