கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு ரத்து இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழு அறிவிக்கைக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், கரோனா அச்சுறுத்தலால் கல்லூரிகளில் பாடங்கள் நடத்தாததால் தேர்வை ரத்து செய்ய மாணவர்கள் கோரினர்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது. தேர்வு நடத்தாமல் மாநில அரசுகள் மாணவர்களைத் தேர்ச்சிப் பெற வைக்கக் கூடாது. கரோனா காரணமாக கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தள்ளி வைக்கலாம். தேர்வு நடத்த இயலாது என முடிவு செய்தால் யு.சி.ஜி.யை மாநில அரசுகள் அணுகலாம். யு.சி.ஜி.யை அணுகித் தேர்வு நடத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க மாநில அரசுகள் கோரலாம் என தீர்ப்பளித்த நீதிபதிகள், பல்கலைக்கழக மானியக்குழு அறிவிக்கைக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் தொடர்ந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.