ரஷ்யாவில் நடைபெற்ற அதிபருக்கான தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் மீண்டும் ரஷ்யாவின் அதிபராகிறார் விளாதிமிர் புதின். இவர் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அந்நாட்டின் அதிபராக இருப்பார்.
ரஷ்யா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தல் தற்போதைய அதிபர் புடின் உட்பட 8 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். கடும் போட்டி நிலவுவதாக சொல்லப்பட்டாலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் புடினே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் ஏராளமான பொதுமக்கள் வாக்களித்தனர்.
வாக்கு எண்ணிக்கை உடனடியாக நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தோற்றுவிடுவார் என பரவலாக சொல்லப்பட்டாலும், சுயேட்சையாக போட்டியிட்ட புடின் 76.6% வாக்குகளுடன் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் 12% வாக்குகளே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.