துணை அதிபர் போட்டிக்கு கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆச்சரியமாக உள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட உள்ளார் என்பது முன்னரே உறுதிசெய்யப்பட்டது. மேலும், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிட உள்ளார். இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்குத் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கட்சியின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், கமலா ஹாரீஸ்க்கு ஜோ பிடென் வாய்ப்பு வழங்கியிருப்பது ஆச்சரியமாக இருப்பதாகவும், அவர் மோசமாக பணியாற்றக்கூடியவர் எனவும் விமர்சித்துள்ளார்.