Skip to main content

சீமானுக்கு கொலை மிரட்டல்; சைபர் கிரைம் விசாரணை

Published on 01/05/2025 | Edited on 01/05/2025
NN

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுவித்துள்ளதாகப் போலீசில் பரபரப்பு புகார் ஒன்று கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

சென்னை காவல் ஆணையரகத்தில் நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த அந்த புகாரில், 'தேனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் இன்ஸ்டாகிராம் வலைத்தளப் பக்கத்தில் சீமானுடைய தலை துண்டாக்கப்படும் என்றும், தெலுங்கு பேசும் மக்களை தவறாக பேசுவதாக சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். எனவே சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சைபர் கிரைம் போலீசார் சந்தோஷ் என்ற அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்