Skip to main content

உடல் நல்லடக்கம்; விடைபெற்றார் போப் பிரான்சிஸ்!

Published on 26/04/2025 | Edited on 26/04/2025

 

Pope Francis bids farewell to the body of the deceased!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த சில மாதங்களாக நிமோனியா உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாகத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதே சமயம் வயது முதிர்வு காரணமாக அவருக்குச் சிகிச்சை அளிப்பது மருத்துவத்துறை நிபுணர்களுக்குச் சவாலாக இருந்தது. 

இருப்பினும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக போப் பிரான்சிஸ் வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். போப் பிரான்சிஸ் மறைவு சர்வதேச அளவில் பலரிடமும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு உலகம் முழுவதில் இருந்தும் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்தனர். அவரது உடலுக்கு உலகம் முழுவதில் இருந்தும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் போப் பிரான்சிஸ் உடலுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் மரியாதை செலுத்தினார். தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் ஆகியோர் நேற்று (25.04.2026) அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் இந்திய நேரப்படி இன்று (26.04.2025) மாலை வாடிகனில் போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்குக் குவிந்தனர். செயிண்ட பீட்டர்ஸ் சதுக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் குவிந்து அஞ்சலி செலுத்தினர். இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இறுதி அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்