Skip to main content

சீனாவுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து... பிரிட்டிஸ் ஏர்வேஸ் அதிரடி!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முகமூடிகளை அனைவரும் அணிந்து வருகிறார்கள். 



இந்த வைரஸ் தாக்குதலுக்கு அஞ்சி பல்வேறு நாடுகள் தங்களின் விமானங்களை சீனாவுக்கு அனுப்ப தயங்கி வருகின்றன. இந்நிலையில், இங்கிலாந்தின் பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனம் சீனாவுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தையும் தடை செய்துள்ளன. சீனாவுக்குள் இயக்கப்படும் விமானங்களில் கூட தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பயணிகளே எடுத்துவர வேண்டும் என்று சீன அரசு சில தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

சார்ந்த செய்திகள்