Skip to main content

மாற்றுத்திறனாளிகள் கழிவறையில் லஞ்சப்பணம்; சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு

Published on 01/05/2025 | Edited on 01/05/2025
Bribe in toilet for the differently-abled; stir at the Registrar's office

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் 4 லட்சம் ரூபாய் லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நஞ்சியம்பாளையம் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு திடீரென்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அலுவலகத்திலிருந்து 4.53 லட்சம் ரூபாய் கணக்கில் வராத லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எந்த நேரத்திலும் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரலாம் சோதனைக்கு வரலாம் என்ற அச்சத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிவறையில் லஞ்சப் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ரெய்டு சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்