கரோனா பயத்தால் சுமார் 3,600 பயணிகளுடன் கடல்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வேர்ல்ட் ட்ரீம் சொகுசு கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த புதன்கிழமை அன்று ஹாங்காங்குக்கு வந்த ’வேர்ல்ட் ட்ரீம்’ சொகுசுக் கப்பலில் இருந்த மூவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதன்காரணமாக அந்த கப்பல் தனிமைப்படுத்தப்பட்டு, கப்பலில் இருந்து பயணிகள் நிலப்பகுதியில் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அதிலிருந்த பயணிகளுக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில், வேறு யாருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக நான்கு நாட்களுக்கு பிறகு அந்த கப்பலில் இருந்து பயணிகள் வெளியே வருவதற்கு அனுமதி வழக்கப்பட்டுள்ளது. இதேபோல 60 க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், மற்றொரு சொகுசு கப்பல் கடலிலேயே தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.