மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தானின் அதிபராக குர்பங்குலி பெர்டிமுகமடோவ் இருந்து வருகிறார். இவர் பாரம்பரிய நாய் வகையான அலபாய் நாய் வகைகளை மிகவும் நேசிக்கிறார். பொதுவாக மத்திய ஆசிய ஷெப்பர்ட் என்றழைக்கப்படும் இந்த நாய் வகைகளை அந்த நாட்டில் சர்வசாதாரணமாக காணலாம்.
இந்த அலபாய் நாய் வகைகள் குறித்து ஏற்கனவே புத்தகம் மற்றும் பாடல் எழுதியுள்ள துர்க்மெனிஸ்தானின் அதிபர், கடந்த காலங்களில் இந்த நாய் குட்டிகளை ரஷ்ய அதிபர் புதினுக்கும், ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவுக்கும் பரிசளித்துள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு இந்த நாய் வகைக்கு, அந்த நாட்டின் தலைநகரில் 50 அடியில் தங்க முலாம் பூசப்பட்ட சிலை ஒன்றையும் திறந்து வைத்துள்ள துர்க்மெனிஸ்தானின் அதிபர், தற்போது இந்த நாய் வகைகளைக் கவுரவிக்கும் விதத்தில், ஏப்ரல் மாதம் கடைசி ஞாயிறு அன்று தேசிய விடுமுறை விடப்படும் என அறிவித்துள்ளார்.
நன்றியுள்ள ஜீவன் மீது அதிபர் காட்டும் பாசம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.