JAPAN

ஜப்பானில் புனபாஷி நகர கல்வி வாரியத்தின் அதிகாரிகள் சிலர், தங்கள் அலுவலகத்தை விட்டு, பணிநேரத்தைவிட சற்று முன்னதாகக் கிளம்பியுள்ளனர். முன்னதாக என்றால் ஒரு மணிநேரமோ, இரண்டு மணிநேரமோ முன்னதாக அல்ல. வெறும் இரண்டு நிமிடம் முன்னதாகக் கிளம்பிச் சென்றுள்ளனர். இதுபோல் அலுவலகத்தை விட்டு முன்னதாகக் கிளம்பிச் செல்லும் சம்பவங்கள் மே 2019 மற்றும் ஜனவரி 2021 இடையே 316 முறை நடந்துள்ளது.

Advertisment

மேலும் அவ்வாறுகிளம்பிச் செல்பவர்கள், சற்றுமுன்னதாகக் கிளம்பிச் செல்வதற்காக தங்களதுஅட்டைகளில் தவறான நேரத்தைக் குறித்துள்ளனர். இதற்கு 59 வயதான மூத்த அதிகாரி உதவி செய்துள்ளார். இதனைக் கண்டுபிடித்த கல்வி வாரிய நிர்வாகம், இரண்டு நிமிடங்கள் முன்னதாகக் கிளம்பிய பெண்ணுக்கு 10-ல் ஒரு பங்கு சம்பளத்தை மூன்று மாதங்களுக்குப் பிடித்தம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த தண்டனைக்கு ஆளான பெண், 5.17 மணிக்கு வரும் பேருந்தில் பயணம் மேற்கொள்ள, அலுவலக நேரமான5.15-க்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பு அலுவலகத்திலிருந்து கிளம்பியுள்ளார்.

Advertisment

அந்தப் பெண்ணைத் தவிர்த்து, இரண்டு மூத்த அதிகாரிகளுக்கு எழுத்துப் பூர்வமான எச்சரிக்கையும், நான்கு பேருக்கு நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானில் நடந்த இந்தச் சம்பவம், தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது.