Skip to main content

“மருமகன் பிரிட்டன் பிரதமராவது பெருமையளிக்கிறது” - இன்போசிஸ் நாராயணமூர்த்தி

Published on 25/10/2022 | Edited on 25/10/2022

 

 'I am proud to have my son-in-law as Prime Minister of Britain' - Infosys Narayana Murthy

 

பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனாக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற யூகங்கள் கிளம்பிய நிலையில், பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனாக் பதவியேற்றால் பிரிட்டன்-இந்தியா இடையேயான உறவு  வலுப்படும் எனவும் கருதப்பட்டது.

 

ஆனால் அதற்கு மாறாக பிரிட்டனின் புதிய பிரதமர் போட்டியில் இருந்த பிரிட்டன் லிஸ் ட்ரஸை மகாராணி எலிசபெத் முறைப்படி பிரதமராக அறிவித்தார். அதன்பின் எலிசபெத் ராணியின் உயிரிழப்பு இங்கிலாந்தை சோகத்திற்குள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி, மினி பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் அடுத்தடுத்து பல்வேறு அமைச்சர்கள் பதவி விலகினர்.

 

இதனால் பிரதமராக பதவியேற்ற 45 நாட்களில் பிரதமர் பதவியை லிஸ் ட்ரஸ் கடந்த 20 ஆம் தேதி ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் பதவிக்கு மீண்டும் ரிஷி சுனாக் போட்டியிட்ட நிலையில் அவர்தான் பிரிட்டனின் அடுத்த பிரதமர் என அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தற்பொழுது பிரிட்டனின் பிரதமராக  ரிஷி சுனாக் பொறுப்பேற்றுள்ளார். அதிகப்படியான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப்பெற்ற ரிஷி சுனாக்கை பிரதமராக்க மன்னர் 3 ஆம் சார்லஸ் ஒப்புதலளித்த நிலையில் அவர் தற்பொழுது பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

 

 'I am proud to have my son-in-law as Prime Minister of Britain' - Infosys Narayana Murthy

 

இதனால் இங்கிலாந்து வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக பிரிட்டன்  பிரதமர் ஆகிறார் என்பதும், பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனாக் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் “ரிஷி பிரிட்டன் பிரதமராவது பெருமை அளிக்கிறது” என நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். “மருமகன் ரிஷி பிரதமராக பதவியேற்றிருப்பது பெருமை அளிக்கிறது. அவரை வாழ்த்துகிறேன். அவர் பிரிட்டன் மக்களுக்காக தன்னால் முடிந்ததை செய்வார் என நம்புகிறேன்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்