தென்கொரியாவுடன் நல்லுறவை கொண்டிருக்கும் வடகொரியா தற்போது தன் காலநேரத்தை அரைமணிநேரம் முன்னதாக மாற்றி தென்கொரியாவுடன் சமமான காலநேரத்துடன் இணைந்துள்ளது. ஒரே நாள் இரவில் நடந்த இந்த மாற்றத்தால் இரு நாடுகளும் தற்போது ஒரே காலநேரத்தை பயன்படுத்தும் வகையில் இருக்கிறது.
ஏற்கனவே பல பிரச்சனைகளுக்கு இடையில் இருந்த இந்த இரு நாடுகள் தற்போது உலகரங்கில் பல நாடுகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கிறது. தற்போது அதில் இந்த காலநேரத்தை சமமாக வைத்து மேலும் ஒரு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வடகொரியா அணுஆயுத ஒப்பந்தங்கள், சோதனைகள் எல்லாம் கொரியா தீபக்கற்பதில் நடத்தி வந்ததால், போர் பதற்றம் அங்கு நிலவி வந்தது. வடகொரியா மீது ஐநா மற்றும் அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளும் விதித்தது. திடீர் திருப்பமாக தென்கொரியாவின் அழைப்பை ஏற்று வடகொரியா குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்துகொண்டது.
இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 27 ஆம் தேதி இருநாட்டு தலைவர்களும் சேர்ந்து உச்சி மாநாட்டை நடந்தலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல, வடகொரிய அதிபர் கிம் ஜான் உன்னும் இருநாடுகளின் எல்லை பகுதியை பிரிக்கும் ஊரில் நடந்த அந்த மாநாட்டில் கலந்து கொண்டார். கலந்து கொள்ள வந்த கிம்மை தென்கொரிய அதிபர் மூன் வரவேற்றார்.
இருநாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, வடகொரியா தனது நேரத்தை விட்டுக்கொடுத்துள்ளது. நேற்று நள்ளிரவு சரியாக 11:30 மணியளவில் வடகொரியா காலநேரம் அரைமணிநேரம் முன்சென்று தென்கொரியா காலநேரத்துடன் இணைத்துக்கொண்டு இருநாடுகளுக்கும் சமமான நேரம் என்று முடிவு செய்தனர். போகிற போக்கை பார்த்தால், இரு நாடுகளும் இணைத்துக்கொண்டு இந்த உலகில் ஒரு நல்ல வளர்ந்த நாடாக மாறக்கூடும் என்றும் பேசிக்கொள்கின்றனர்.