சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் கவலைப்படுவதே இல்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாசில் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ட்ரம்ப், "பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாக விளங்கும் கரியமிலவாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் பிரான்ஸ் மாநாட்டில் போடப்பட்டது, ஆனால் இந்த ஒப்பந்தத்தை எந்த நாடும் பின்பற்றவில்லை. அமெரிக்காதான் கரியமிலவாயு வெளியேற்றத்தில் முதலிடத்தில் உள்ளது என அனைவரும் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இதைப்பற்றி கவலைப்படுவதேயில்லை. இதனால்தான் ஒருதலைபட்சமான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினோம்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா இப்போது இயற்கை எரிவாய் எண்ணெய் துறையில் முன்னணியில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.