தற்போது உலகில் உள்ள பெரும்பாலானோர், மக்களின் கவனம் பெற சமூக வலைதளத்தை நாடுகிறார்கள். அதேபோன்று பாகிஸ்தானைச் சேர்ந்த சுயேட்சியை வேட்பாளரான அயஸ் மெமோன் மோதிவாலா என்பவரும் சமூக வலைதளத்தின் மூலம் மக்களின் வாக்குகளையும், கவனத்தையும் பெற எண்ணற்ற வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
கராச்சி நகரில் போட்டியிடவுள்ள இவர், அந்த நகரின் முக்கிய பிரச்சனையான சுகாதார சீர்கேட்டை மையமாக வைத்து பிரச்சாரங்களை நடத்த முடிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் இருக்கும் இவரது பக்கத்தில் உள்ள ஒரு வீடியோவில் குப்பைக்கு மத்தியில் உட்கார்ந்து டீ குடித்துவிட்டு, அங்கேயே உறங்கும் படியாக உள்ளார். இதை வீடியோவாக எடுத்து பதிவிட, மக்கள் இவரை ‘ஸ்டார் பிளஸ் ட்ராமா’ என்று அழைக்கின்றனர்.
மேலும் இவர் பதிவிட்ட வீடியோக்களில் வைரலானது என்றால் பாதாள கழிவுநீர் ஓட்டத்தின் உள்ளே சென்றது, குப்பைகளுக்கு மத்தியில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டது என்று பல பிரச்சாரங்கள் செய்துள்ளார். அதில் பாக்கிஸ்தான் கொடியை வைத்துக்கொண்டு கழிவு நீரைப்பருகி, அதில் படுத்து உறங்கியதுதான் அந்த ஊர் மக்களை பேச வைத்துள்ளது.
மேலும் இவர் வாக்காளரை தன் கட்சியில் இணைத்துக்கொள்ள கட்சியில் சேருவோருக்கு பரிசுகளும் தருகிறார். இவரின் சமூக வலைத்தள பக்கங்களில் குப்பைகளுக்கு மத்தியில் இவர் இருப்பது போன்ற புகைப்படங்கள் பல இருக்கின்றன. வருகின்ற தேர்தலில் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெறுவதற்காகவே இவர் இவ்வாறெல்லாம் செய்கிறார் என்று ஒருசிலர் கூறுகின்றனர்.