அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே சென்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அங்கேயே கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பல சர்ச்சைகள் ஆதாரங்கள் எல்லாம் வெளிவந்த பிறகே சவுதி அரேபியா அரசு கொலை செய்ததை ஒப்புகொண்டது. அதன் பின் அதுதொடர்பாக 18 பேரை சவுதி அரேபியா அரசு கைது செய்தது. ஆனால் இந்த வழக்கு, சம்பவம் நடந்த இடமான துருக்கியிலே நடத்தப்பட வேண்டும் என துருக்கி கூறி வருகிறது. ஆனால் இந்தக் கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சர் அடெல் அல் ஜுபைர் “ஜமால் கொலை தொடர்பக சவுதி அரேபியாவை சேர்ந்த 18 பேரையும் நாங்கள் கைது செய்து காவலில் அடைத்துள்ளோம். அதனால் இதுதொடர்பான விசாரணையும் சவுதி அரேபியா நாட்டில்தான் நடைபெறும். இதில் மூன்றாவது நாட்டின் தலையீடுக்கு வாய்ப்பே இல்லை” என தெரிவிதுள்ளார்.