உலகில் தற்போது உள்ள அதிமுக்கியமான இரண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரான்ஸ் நாட்டின் கிறிஸ்டோபர் காஸ்டஸ் எனும் ஆய்வாளர் புதிய இயந்திரத்தை கண்டுப்பிடித்துள்ளார்.
தற்போது உலகத்தின் முக்கிய பிரச்சனையாக இருப்பது பிளாஸ்டிக். அடுத்தது எரிபொருள். இவ்விரண்டுக்கும் தீர்வு காணும் வகையில் பிரான்ஸ் நாட்டின் கிறிஸ்டோபர் காஸ்டஸ் எனும் ஆய்வாளர் பிளாஸ்டிக் பொருளில் இருந்து பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் புதிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.
இவர் கண்டுபிடித்திருக்கும் இயந்திரத்தில் பிளாஸ்டிக்கை 450 டிகிரி செல்ஷியஸில் சூடு படுத்தும்போது அதில் இருந்து 65% டீசல், 18% பெட்ரோல் மற்றும் 10% கேஸ் கிடைக்குமெனத் தெரிவித்துள்ளார். இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு கிலோ பிளாஸ்டிக் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோலை உற்பத்தி செய்கிறது. இந்த இயந்திரம் ஒரு மாதத்திற்கு 10 டன் பிளாஸ்டிக்களை உருக்கி எரிபொருளை உற்பத்தி செய்யுமெனவும் தெரிவித்துள்ளார்.
இந்த இயந்திரத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ. 39 லட்சம். இந்த இயந்திரம் வளரும் நாடுகளுக்கு ஒரு பெரிய வரமாக இருக்கும் என ஆய்வாளர் கிறிஸ்டோபர் காஸ்டஸ் கூறுகிறார்.