உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,19,240 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,28,194 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,00,101 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் மேலும் 28,429 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 10,64,194 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ஸ்பெயினில் 2,36,899, இத்தாலியில் 2,03,591 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிரான்சில் 1,66,420, பிரிட்டனில் 1,65,221, ஜெர்மனியில் 1,61,539, துருக்கியில் 1,17,589, ரஷ்யாவில் 99,399, ஈரானில் 93,657, சீனாவில் 82,862, பிரேசிலில் 79,361, கனடாவில் 51,597, பாகிஸ்தானில் 15,525, சிங்கப்பூரில் 15,641, மலேசியாவில் 5,945, இலங்கையில் 649, சவுதி அரேபியாவில் 21,402, ஐக்கிய அரபு அமீரகத்தில் 11,929, கத்தாரில் 12,564 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கரோனாவுக்கு மேலும் 2,390 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 61,656 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் ஸ்பெயினில் 24,275, இத்தாலியில் 27,682, பிரான்சில் 24,087, பிரிட்டனில் 26,097, ஜெர்மனியில் 6,467, துருக்கியில் 3,081, ரஷ்யாவில் 972, ஈரானில் 5,957, சீனாவில் 4,633, பிரேசிலில் 5,511, கனடாவில் 2,996, பாகிஸ்தானில் 343, சிங்கப்பூரில் 14, மலேசியாவில் 100, இலங்கையில் 7, சவுதி அரேபியாவில் 157, கத்தாரில் 10 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.