Published on 19/09/2022 | Edited on 19/09/2022
கடந்த 9ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96-வது வயதில் உயிரிழந்தார். கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத், பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற நிலையில் அவரது மறைவு உலக நாடுகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. உலக தலைவர்கள் அனைவரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், பல்வேறு மரியாதை நிகழ்வுகளுக்கு பிறகு அவரது உடல் இன்று இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இங்கிலாந்து ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன் இந்த இறுதி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்ட ஊர்தியின் மீது அவரது கிரீடமும் வைக்கப்பட்டிருந்தது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தால் சோகத்தில் மூழ்கியது லண்டன்.