Skip to main content

4 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை   

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

 

Coronavirus toll exceeds 4 thousand

 

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் மேலும் 17 பேர் உயிரிழந்ததை அடுத்து தற்போது உலக அளவில் இந்த வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 25 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் ஓமனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. காஞ்சிபுரத்தை சேர்ந்த அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவருடன் பழகிய 27 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் 27 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளது சுகாதாரத்துறை.


 

 

சார்ந்த செய்திகள்