இன்றைய இளம் தலைமுறையினர் அதிக அளவில் உபயோகப்படுத்தும் பொழுதுபோக்கு விஷயமாக மாறியுள்ளது டிக் டாக் ஆப். இதுவரை உலக அளவில் 100 கோடி பேர் இந்த ஆப்பை உபயோகப்படுத்தி வருகின்றனர். அதில் 25 கோடி பேர் இந்தியாவில் உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி பெரும்பாலானோர் பயன்படுத்தும் இந்த ஆப் தற்போது மிகப்பெரிய சிக்கல் ஒன்றில் மாட்டியுள்ளது. தனது பயன்பாட்டாளர்களில் 13 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் விவரங்களை அவர்களுக்கே தெரியாமல் திருடியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டு அதற்காக அந்த நிறுவனத்திற்கு 5.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் குழந்தைகளின் இருப்பிடம், மெயில் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை திருடியுள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த ஆப்பை உபயோகிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சமூக ஆர்வலரால் தெரிவித்து வருகின்றனர்.