உலகின் பல்வேறு நாடுகளிலும் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இந்நிலையில் உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்துள்ளது. அதாவது இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது.
அதனையொட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்து, வெலிங்டன் நகரில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மக்கள் உற்சாகமாக வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை நியூசிலாந்து மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.
அதே சமயம் இந்தியாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், கோவா உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.