அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த மார்வின் ஹாஜொஸ் (75) என்பவர் அவர் செல்லமாக வளர்த்த பறவையாலேயே அடித்து கொல்லப்பட்டுள்ளார்.

வித்தியாசமான செல்லப் பிராணிகளை வளர்ப்பதை வாடிக்கையாக கொண்டிருந்த அவர் கசோவாரி பறவை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். சுமார் 1 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை வளரக்கூடிய இந்த பறவை உலக அளவில் ஆபத்தான பறவை வகை என குறிப்பிடப்படுவது ஆகும்.
கடந்த வெள்ளிக்கிழமை தான் வளர்க்கும் கசோவாரி பறவைக்கு உணவு வைப்பதற்காக சென்று இருக்கிறார் மார்வின். அப்போது கால் தவறி கீழே விழுந்த அவரை அவர் வளர்ந்துவந்த கசோவாரி பறவை தனது நகங்களால் அடித்து மோசமாக காயப்படுத்தியுள்ளது. படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆபத்தான பறவையான கசோவாரியை செல்லப் பிராணியாக வளர்ப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என இது குறித்து அமெரிக்க சராணலய அதிகாரிகள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.