2021 ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டுவருகின்றன. அமெரிக்க விஞ்ஞானிகள் டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சியுகுரோ மனாபே, கிளாஸ் ஹாசல்மேன், ஜார்ஜியோ பாரிசி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அதேபோல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு நாவலாசிரியர் அப்துல் ரசாக் குர்னாவுக்கும், அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிகையாளர் டிமிட்ரி ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, தொழிலாளர் பொருளாதாரத்தில் அனுபவ பங்களிப்புக்காக டேவிட் கார்டுக்கும், காரண உறவுகளின் பகுப்பாய்வில் முறையான பங்களிப்பிற்காக ஜோஷ்வா டி. ஆங்கிரிஸ்ட் மற்றும் கைடோ டபிள்யூ. இம்பென்ஸ் ஆகியோருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.