Skip to main content

அமெரிக்காவைத்  தொடர்ந்து இரண்டாவது தடுப்பூசிக்கு அனுமதியளித்த கனடா!

Published on 24/12/2020 | Edited on 24/12/2020
covid vaccine

 

 

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று நோய்க்கு, தடுப்பூசி கண்டுபிடிக்க இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் முயன்று வந்தன. இதில், அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனுமதியளித்துள்ளன. அந்த நாடுகளில், பைசர் நிறுவனதின் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.  

 

சமீபத்தில் அமெரிக்கா, கரோனா தொற்றுக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசிக்கு அனுமதியளித்தது. மாடர்னா என்னும் மருந்து நிறுவனமும், அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனமும் இந்த புதிய தடுப்பூசியை தயாரித்துள்ளன.

 

இந்தநிலையில் மாடர்னா தடுப்பூசிக்கு, அமெரிக்கவைத் தொடர்ந்து இரண்டாவது நாடக கனடா அனுமதியளித்துள்ளது.  ஆய்வக பரிசோதனையில் இந்த தடுப்பூசி பெரிய அளவிலோ, உயிரை பறிக்கும் அளவிலோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மேலும் இந்த தடுப்பூசியால் எந்த மரணமும் நிகழவில்லை என்பதால், இந்த தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்படுவதாக கனடா நாடு அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்