myanmar

மியான்மர்நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு,ஆங் சான் சூகி உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்தநாட்டில் சமூகவலைதங்கள் முடக்கப்பட்டுள்ளன.

Advertisment

இராணுவ ஆட்சிக்குஎதிராக அந்தநாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனநாயக ஆட்சியைவலியுறுத்தியும், கைதுசெய்யப்பட்டஆங் சான் சூகிஉள்ளிட்ட தலைவர்களை விடுவிக்குமாறும் அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

தலைநகர் நய்பிடாவில் போராடிய மக்களை இராணுவம்தண்ணீரைப் பீய்ச்சியடித்துகலைத்தது. அதேபோல்மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேவின் ஏழு நகரங்களில் தற்காப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம்,மக்கள் போராட்டம் நடத்துவதையும், ஐந்து பேருக்கு மேல் கூடுவதையும் மியான்மர்இராணுவம் தடை செய்துள்ளது. மேலும் இரவு 8 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை மக்கள் வெளியே வரவும்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் இராணுவம் ஆட்சியைக் கவிழ்த்ததற்கு, உலகநாடுகள்கண்டனம் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகளின்பாதுகாப்பு சபையும் மியான்மர் இராணுவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisment