Skip to main content

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு கைது வாரண்ட் பிறப்பிப்பு!.

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

donald trump

 

ஈராக் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி, அமெரிக்காவின் ஆளில்லா ராணுவ விமானம் மூலம் கடந்தாண்டு ஜனவரி மாதம் கொல்லப்பட்டார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், "அமெரிக்காவின் ராஜாங்க அதிகாரிகள் மற்றும் ராணுவவீரர்கள் மீது உடனடி மற்றும் மோசமான தாக்குதல் நடத்த காசிம் சுலைமானி திட்டமிட்டிருந்தார். நாங்கள் அவரைப் பிடித்துக் கொன்றுவிட்டோம்" எனக் கூறியிருந்தார்.

 

இதனைத்தொடர்ந்து, அமெரிக்கப் படைகளைத் தீவிரவாதிகள் என அறிவித்த ஈராக், தங்கள் நாட்டிலுள்ள அமெரிக்காவின் ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. மேலும், அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல் குறித்து நீதிமன்ற விசாரணையும் நடைபெற்று வந்தது.  

 

இந்தநிலையில், அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்தத் தகவலை ஈராக் நீதித்துறை தெரிவித்துள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமண நிகழ்ச்சியில் தீ விபத்து -100 பேர் உயிரிழப்பு

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

fire at wedding ceremony

 

திருமண நிகழ்ச்சி ஒன்றில் திடீரென திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்த சம்பவம் ஈராக்கில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அல் ஹம்தனியா நகரத்தில் தடபுடலாக திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி நூறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

Next Story

புதுவிதமான காய்ச்சல் பரவல்... மூக்கிலிருந்து ரத்தம் வந்து பலர் உயிரிழப்பு!

Published on 31/05/2022 | Edited on 31/05/2022

 

பரக

ஈராக் நாட்டில் மூக்கிலிருந்து ரத்தம் வடியச் செய்யும் புதிய காய்ச்சலுக்கு பலர் உயிரிழப்பது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஈராக் நாட்டில் கடந்த சில வாரங்களாக இந்த காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்பே இந்த காய்ச்சல் அங்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்,தற்போதைய காய்ச்சல் பரவலில் இதுவரை பாதிக்கப்பட்ட 111 பேரில் 19 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு வகையான உண்ணி தாக்குதலுக்கு ஆளாகும் கால்நடைகளை வெட்டும் போது அதனால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு இக்காய்ச்சல் ஏற்படுவதாக முதல் கட்டமாகக் கண்டறிந்துள்ளார்கள். இந்த காய்ச்சலை கிரிமியன் காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என்று கூட சிலர் அழைக்கிறார்கள். மூக்கில் ரத்தம் வருவதே இந்த காய்ச்சலின் முதல் அறிகுறி. இந்த நோய் பாதிக்கப்படும் ஐந்தில் ஒருவர் பலியாக அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல, இந்நோய்க்கு இதுவரை தடுப்பூசி எதுவும் கண்டறியப்படவில்லை என்பதும் மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.