Skip to main content

இந்தியாவிற்கு திடீர் பாசக்கரம் நீட்டும் அமெரிக்கா... காரணம் ரஷ்யா...

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

இந்தியாவின் பிதுக்கப்பு துறை சார்ந்த அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஆலிஸ் ஜி வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

 

america promises to fulfil india's defence needs

 

 

400 கி.மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்ய ரஷ்யாவுடன் கடந்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, இதனை கைவிடவும் கோரியது. இல்லையென்றால் பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா மிரட்டியது. இதனை தொடர்ந்தும் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றாத நிலையில் தற்போது அமெரிக்கா தனது நிலைப்பாடை அடியோடு மாற்றியுள்ளது.

ரஷ்யாவுக்கு பதிலாக அமெரிக்காவே இந்தியாவிற்கு தேவையான அனைத்து பாதுகாப்புத்துறை உதவிகளையும் செய்யும் என்பதை உணர்ந்து வகையில் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.  

மேலும் பேசிய அமெரிக்க அதிகாரி, "ரஷ்யாவிடமிருந்து பாரம்பரியமாக இந்தியா ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்து வருகிறது என்றாலும், தற்போது எஸ்-400 ஏவுகணைகளை இந்தியா வாங்குவது இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்பை  மட்டுப்படுத்தி விடும்" எனவும் கூறியுள்ளார். அமெரிக்காவின் இந்த செயல் ரஷ்யா உடனான ஒப்பந்தத்தை இந்தியாவை கைவிடவைக்கவே என்ற கருத்தும் எழுந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்