ஜெர்மனியை சேர்ந்த 'மான்சாண்டோ நிறுவனம்' (MONSANTO COMPANY) மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் மற்றும் செடிகளில் தெளிக்க கூடிய பூச்சிக்கொல்லி மருந்துகளை உற்பத்திக் செய்யும் நிறுவனம் ஆகும். மேலும் விவசாயத் துறைக்கு தேவையான அனைத்து வகையான உரங்களையும் இந்த நிறுவனம் உற்பத்தி செய்து உலகம் முழுவதும் அதை விற்பனை செய்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஒருவர் 'மான்சாண்டோ' நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் மான்சாண்டோ நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தியதால் தான் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
![MONSANTO](http://image.nakkheeran.in/cdn/farfuture/yQColho5rgERVRAo-CLXhoQfUz7n8HeMeowkdesFdNI/1558009210/sites/default/files/inline-images/monsanto-gly-eu-1024x576-1024x576.jpg)
அது தொடர்பான வழக்கில் மான்சாண்டோ நிறுவனத்திற்கு எதிராக ஆஜரான வழக்கறிஞர்கள் ' தொடக்க காலத்திலிருந்து மான்சாண்டோ நிறுவனம் , செடிகளில் உள்ள பூச்சிக்கொல்லிகளை கொள்ளும் தயாரிப்புகள் பாதுகாப்பானவை என்பதை ஆதாரங்கள் மூலம் இந்த நிறுவனம் நிரூபிக்கவில்லை என்ற ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதனை ஏற்ற கலிபோர்னியா நீதிமன்றம் பாதிக்கப்பட்ட தம்பதிக்கு சுமார் 2 பில்லியன் டாலரை இழப்பீடாக ( இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 14000 கோடி) வழங்கும் படி 'மான்சாண்டோ' நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என 'மான்சாண்டோ நிறுவனம்' அறிவித்துள்ளது.