Skip to main content

"கச்சத்தீவில் தொய்வுற்ற சைவவழி மரபுகள் மீண்டும் துவக்கப்பட வேண்டும்!" - மறவன்புலவு சச்சிதானந்தன் கோரிக்கை!

Published on 13/03/2021 | Edited on 13/03/2021

 

Kachchatheevu TEMPLE SRILANKA PUBLICATION OWNER REQUEST

 

இலங்கையிலுள்ள கச்சத்தீவில் அருள்மிகு கயற்கண்ணி திருகச்சேச்சரநாதர் திருக்கோயிலில் மீண்டும் திருப்பணி மற்றும் குடமுழுக்குச் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய அரசின் உதவியைக் கேட்டுள்ளார் 'காந்தளகம்' பதிப்பகத்தின் உரிமையாளரும் இலங்கை சிவசேனா அமைப்பின் தலைவருமான மறவன்புலவு சச்சிதானந்தன்.

 

இதுகுறித்துப் பேசும் அவர், "கச்சத்தீவில் இருக்கும் கத்தோலிக்க கிருத்துவத்துக்கு மாறாத சைவர்கள், திருகச்சேச்சரநாதர் திருக்கோயில் இருந்த இடத்தில் சிவனின் திருமேணியை வைத்து வழிபட்டு வருகிறார்கள். இலங்கையிலுள்ள நெடுந்தீவு மீனவர்களுக்கும், தொண்டி முதல் ராமேஸ்வரம் வரை வாழும் தமிழக மீனவர்களுக்கும் இடையே திருமண உறவுகள் நெடுங்காலமாக இருந்து வருகிறது. நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற தமிழகத்திலிருந்து கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்கள் வந்து போவார்கள்.

 

நெடுந்தீவு மீனவர்கள் கச்சத்தீவில் அந்தோனியார் சிலையை அமைத்து வழிபடத் தொடங்கினர். இதனால் சைவ வழிபாடுகள் முற்றிலும் தொய்வுற ஆரம்பித்தது. பத்தாயிரமாண்டுகளுக்கும் கூடுதலான சைவ வழிபாட்டு மரபுகள் தொய்வுற்றதில் இலங்கையிலுள்ள சைவர்களும், இந்திய சைவர்களும் மிகவும் வருந்தினர். அதனால், கச்சித்தீவிலுள்ள அருள்மிகு கயற்கண்ணி உடனுறை கச்சேச்சரநாதர் திருக்கோயிலைப் புனரமைத்து மீண்டும் அக்கோயிலில் திருப்பணியும் குடமுழுக்கும் நடத்தப்பட வேண்டும். இது நடந்தால், இலங்கையில் வாழும் சைவர்களின் துன்பங்களும் துயரங்களும் நீங்கும்" என்கிறார் மறவன்புலவு சச்சிதானந்தன். 

 

Kachchatheevu TEMPLE SRILANKA PUBLICATION OWNER REQUEST

 

கச்சேச்சரநாதர் திருக்கோயிலில் திருப்பணியும் குடமுழுக்கு நீராட்டும் நடக்க இந்தியப் பிரதமர் மோடியின் உதவியைக் கேட்டுள்ளார் சச்சிதானந்தன். தமிழக பா.ஜ.க.வின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம், சச்சிதானந்தத்தின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

 

"தமிழகத்துக்குச் சொந்தமாக இருந்து இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவில், கச்சேச்சரநாதர் திருக்கோயில் திருப்பணித் தொடங்கினால் சைவர்களின் மனம் மகிழும். தமிழகத்தின் ஆன்மிகப் பக்தர்களும் ஆனந்த கூத்தாடுவார்கள். அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறேன்" என்கிறார் காயத்ரிரகுராம். ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் சச்சிதானந்தத்தின் கோரிக்கை குறித்து இலங்கை அரசிடம் மத்திய அரசு விவாதிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாகை - காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Passenger ferry service between Nagai Kangesan again
கோப்புப்படம்

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மழையைக் காரணம் காட்டி பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2018) நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இதற்காக இந்தக் கப்பல் மே 10 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.