Published on 20/03/2021 | Edited on 20/03/2021

பாகிஸ்தானில் தற்போது மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த கரோனா தடுப்பூசிகள் சீனாவில் உருவாக்கப்பட்டதாகும். இந்த தடுப்பூசியின் முதல் டோஸை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த 18 ஆம் தேதி செலுத்திக்கொண்டார்.
இந்தநிலையில் இன்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கரோனா தொற்று உறுதியாகிவுள்ளது. இதனையடுத்து அவர், தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.