Published on 01/12/2018 | Edited on 01/12/2018
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக டியுடெர்ட் கடந்த 2016 ஆம் ஆண்டு பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின் போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த இரண்டு ஆண்டுகளில் போதை பொருள் கடத்திய 5000 பேர் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் பலர் தலைமறைவாக இருக்கின்றனர். இந்நிலையில் 17 வயது சிறுவன் போதைப்பொருள் கடத்தியதாக போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த நிகழ்வுக்கு உலக நாடுகள் மத்தியிலும், பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களிடமும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.